தர்மபுரி தொகுதியில் 2014-ம் ஆண்டு வெற்றி பெற்று எம்.பியாக தேர்வான அன்புமணி ராமதாஸ், இம்முறை தோல்வியடைந்துள்ளார்.
தர்மபுரியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக-வின் அன்புமணி ராமதாஸ் தான் மீண்டும் இம்முறை வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் திமுக-வுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றார் அன்புமணி ராமதாஸ். தர்மபுரி தொகுதியைப் பொறுத்தவரையில் வன்னியர் சமூகம் சார்ந்த ஓட்டுகளே அன்புமணிக்கு சாதகமாக அமைந்தன.
ஆனால், திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் சப்தமில்லாமல் ஒரு சாதனையை செய்துள்ளார். அதிமுக + பாஜக என்று பெரும் கூட்டணி பலத்தில் போட்டியிட்ட அன்புமணியை செந்தில் குமார் வீழ்த்தியுள்ளார்.
The Declaration form.Thank you Dharmapuri constituents.😊🙏 pic.twitter.com/Mkr46ZIVZ0
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) May 23, 2019
வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை, பின்னடைவு என்று மாறி மாறி நிலவரம் வெளியான நிலையில், இறுதியாக 70 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் செந்தில் குமார் வெற்றி பெற்றுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.