சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்திவருகிறது. இந்தியாவில் மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் பொதுமக்களைக் கடந்து மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து உறுதி செய்யப்பட்டுவருகிறது. அதனைக் கடந்து, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதித்தவருகின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் கொரோனா பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் இதுவரையில், 8 லட்சத்துக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தி.மு.க எம்.எல்.ஏவும், அக்கட்சியின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உத்தண்டியில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார் என்று செய்திகள் பரவியது. இந்தநிலையில், ’எனக்கு கொரோனா தொற்று இல்லை. சளி, காய்ச்சல் என்று இருந்ததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நலமாக உள்ளேன்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.