ஜாக்டோ-ஜியோ விவகாரம்: சட்டப்பேரவையில் தி.மு.க கவன ஈர்ப்பு தீர்மானம்

’ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்’ என கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசினார்.

Web Desk | news18
Updated: February 11, 2019, 12:21 PM IST
ஜாக்டோ-ஜியோ விவகாரம்: சட்டப்பேரவையில் தி.மு.க கவன ஈர்ப்பு தீர்மானம்
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: February 11, 2019, 12:21 PM IST
ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று தி.மு.க சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தமிழக அரசு சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இன்றிலிருந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. இன்று, ஜாக்டோ-ஜியோ தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. ’அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அழைத்து, அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். போராட்டக் காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்’ என கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசினார்.

இதையடுத்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “பொதுத்தேர்வு நெருங்கும் நேரம் என்பதால் நிர்வாக ரீதியாக வேறு வழி இல்லாமல் அரசு நடவடிக்கை மேற்கொண்டது. போராட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் அவர்கள் மீது 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை நீக்குவது குறித்து அரசு பரிசீலிக்கும்” எனக் கூறினார்.

மேலும் பார்க்க:
கூட்டணிக்காக அதிமுகவை மிரட்டும் பாஜக... ஸ்டாலின் பகீரங்க குற்றச்சாட்டு
First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...