வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக நீதிமன்றத்தை நாடும் - மு.க. ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக நீதிமன்றத்தை நாடும் என்று, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவர் ஒப்புதலையும் பெற்ற வேளாண் சட்டங்ளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இன்று தமிழகம் முழுவதும் திமுக தோழமைக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் கீழ் அம்பியில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. விவசாய பகுதி அருகே போராட்ட மேடை அமைந்திருந்த நிலையில் அங்கு செல்லும் முன், வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் ஸ்டாலின் குறைகளைக் கேட்டறிந்தார்.

  போராட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், மக்கள் விரோதச் சட்டம் என்றால் திமுக துணிச்சலோடு எதிர்த்து நிற்கும் என்றார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண் சலுகை, கடன், மானியம் ஆகியவை குறித்து ஒருவரிகூட வேளாண் சட்டத்தில் இல்லை என்று குற்றம்சாட்டினார்.

  Also read: விவசாயிகளுக்காக ஆட்சியை தியாகம் செய்ய தயார்: முதல்வர் நாராயணசாமி ஆவேசம்  இந்தச் சட்டம் விவசாயிகளை நிராயுதபாணிகளாக்கும் என்று எச்சரித்த ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் உண்மையாக வாக்கெடுப்பு நடந்திருந்தால் மசோதா தோற்றுப் போயிருக்கும் என்றார். விரைவில் அடுத்தக்கட்ட போராட்டம் அறிவிக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  Published by:Rizwan
  First published: