அதிமுகவினர் மீது கொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தினை அணுகுவோம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தமிழக ஆளுநரை சந்தித்து வந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் தமிழக ஆளுநரை சந்தித்து , முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் செய்துள்ள ஊழல்கள் குறித்த ஆதாரங்களை ஆளுநரிடம் சமர்பித்துள்ளோம்.
1995ம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா மீது இதே புகாரை கலைஞர் வழங்கினார். ஆனால் பல ஆண்டுகள் கடந்தால் அதனை மக்கள் மறந்து விட்டார்கள். அன்று கொடுத்த புகார்தான் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
6133 கோடி ரூபாய், 6 நெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் விட்டதில் முதலமைச்சர் முறைகேடு செய்துள்ளார், முறைகேடு நடந்துள்ளது என்று கூறி இருக்கிறோம். வருவாய்க்கு அதிகப்படியாக முதலமைச்சர் சொத்து சேர்த்துள்ளார். எடப்பாடி சொத்து குவிப்பு வழக்கில் நிரூபிக்கப்பட்டால் குறைந்த பட்சம் 4 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.
கொரானா நேரத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு , பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5கிலோ அரிசி கொடுக்க வேண்டும் என மத்திய அரசு சொல்லி இருக்கிறது. அந்த அரிசியை வெளி மாநிலத்திற்கு விற்று லாபம் கொண்டுள்ளார்கள் அதனையும் ஆளுநரிடம் ஆதாரத்துடன் கொடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.
Also read... போலீசை பழிவாங்க காவலர் குடியிருப்புகளில் மட்டுமே சைக்கிள்கள் திருடியவர்கள் கைது!
உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி அனைத்திலும் ஊழல் புரிந்துள்ளார். LED விளக்குகள் வாங்குவதில் கூட ஊழல் ,450 ரூபாய்க்கு வாங்கும் விளக்குகளை 4120 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார். இப்படி பல விசயங்களில் ஊழல் செய்துள்ளார். அமைச்சர் தங்கமணி 1000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார். அத்தனையும் ஆதாரத்துடன் கொடுத்து இருக்கிறோம். உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீதும் கொடுத்துள்ளோம்.
தொடர்ந்து பேசிய அவர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் கொடுத்துள்ளோம். செவிலியர் முதல் மருத்துவர்கள் வரை ஊழல் செய்துள்ளார். இடமாற்றம் செய்ய அவர்களிடம் பணம் வாங்குவதை கூட வருமான வரித்துறை பிடித்துள்ளது. என்ன பதவிக்கு எவ்வளவு தொகை கொடுத்தார்கள் என்பதனை கையும் களவுமாக பிடித்துள்ளார்கள். குட்கா வழக்கு கூட அனைவருக்கும் தெரியும் என்று கூறிய அவர், பாரத் நெட் டெண்டரில் ஆர்.பி. உதயகுமார் 1950 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார். அனைத்தையும் அளுநரிடம் ஆதாரத்துடன் கொடுத்துள்ளோம். ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்ற நப்பிக்கை இருக்கிறது. அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம் என அவர் தெரிவித்தார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.