ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எங்களுக்கு பின் கட்சியில் வந்தவர்கள் எல்லாம் எம்.பி, எம்.எல்.ஏ ஆகி விட்டனர் - ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு

எங்களுக்கு பின் கட்சியில் வந்தவர்கள் எல்லாம் எம்.பி, எம்.எல்.ஏ ஆகி விட்டனர் - ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு

ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி

RS BHarathi | நாங்கள் கொண்டு வந்து கட்சியில் சேர்த்தவர்கள் எல்லாரும் எம்பி, அமைச்சர் என ஆகிவிட்டனர். நாங்கள் இன்னமும் அப்படியேதான் இருக்கிறோம் - ஆர்.எஸ்.பாரதி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கட்சிக்கு விசுவாசமாக இருந்தாலும் அவ்வளவு எளிதில் பதவி கிடைக்காது என்றும் அதனை ஜீரணித்துக் கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.

சென்னை ஆர்.ஏ.புரம் தனியார் விடுதியில் மறைந்த முன்னாள் எம்.பி ஜின்னாவின் படத் திறப்பு விழாவில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். பின்னர் விழாவில் பேசிய ஆர்.எஸ்.பாரதி கட்சிக்கு விசுவமாக இருந்தால் அவ்வளவு எளிதில் பதவி கிடைக்காது என்றும் ஒரே கட்சி ஒரே கொடி என்று இருந்த எனக்கு 63 வயதில் தான் எம்பி பதவியே கிடைத்தது. இதையெல்லாம் ஜீரணித்துக்கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும் என பேசினார்.

கட்சியில் துரோகம் செய்துவிட்டு முதுகில் குத்திவிட்டு சென்றவர்கள் பின்னால் வந்து கொஞ்சுவார்கள். அதனால் நான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளேன். நாங்கள் கொண்டு வந்து கட்சியில் சேர்த்தவர்கள் எல்லாரும் எம்பி, அமைச்சர் என ஆகிவிட்டனர். நாங்கள் இன்னமும் அப்படியேதான் இருக்கிறோம்.

இதையும் படிங்க: விதிமீறி கட்டப்படும் கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டு உடனடியாக இடிக்கப்படும் : அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை

 கட்சியில் எவ்வளோ கஷ்டப்பட்டாலும் நம்மளை ஒதுக்கிவிடுவார்கள். ஆனால், அதையெல்லாம் சகித்துக்கொண்டு கட்சியில் ஒரு தொண்டனாக இருக்கவேண்டும். பதவி ஒருநாள் அதுவாகவே கிடைக்கும் என பேசினார். ஆர்.எஸ். பாரதியின் இந்த பேச்சு திமுக வட்டாரம் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: DMK, DMK executive RS Bharadhi, RS Bharathi