ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கவர்னர் விவகாரம்: டெல்லி விரையும் திமுக பிரதிநிதிகள்... குடியரசு தலைவரை சந்திக்க திட்டம்!

கவர்னர் விவகாரம்: டெல்லி விரையும் திமுக பிரதிநிதிகள்... குடியரசு தலைவரை சந்திக்க திட்டம்!

டி.ஆர்.பாலு, திரவுபதி முர்மு

டி.ஆர்.பாலு, திரவுபதி முர்மு

குடியரசுத் தலைவரை சந்திப்பதற்கான அனுமதி கிடைத்ததா? எந்த நேரத்தில் சந்திப்பு? தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் சில பகுதிகளை படிக்காமல், ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக திட்டமிட்டுள்ளது.

ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில் ஜனவரி 9ம் தேதி, பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். இதையடுத்து, ஆளுநருக்கு எதிராக, முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வாசித்துக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறினார்.

தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக படிக்காதது, பேரவையில் தேசிய கீதம் இசைக்கும் முன்பாகவே ஆளுநர் வெளியேறியது உள்ளிட்ட விவகாரங்களை அவை விதிமீறல்களாக திமுக கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-விடம் டெல்லியில் புதன்கிழமை முறையிட திமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் டெல்லி செல்கின்றனர். எனினும், குடியரசுத் தலைவரை சந்திப்பதற்கான அனுமதி கிடைத்ததா? எந்த நேரத்தில் சந்திப்பு? தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

First published:

Tags: Delhi, Draupadi Murmu, President, T.r.balu