ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

திமுக கூட்டணி

திமுக கூட்டணி

தொகுதிகள் ஒதுக்கப்படா விட்டாலும், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்று திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரசுக்கு 10, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 20 தொகுதிகளில் திமுக களம் காண்கிறது.

கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தபோதும், திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டு வந்தது. தற்போது அவை இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் விவரம் பின்வருமாறு...

காங்கிரஸ்:

கன்னியாகுமரி,

சிவகங்கை,

விருதுநகர்,

கிருஷ்ணகிரி,

கரூர்,

திருச்சி,

தேனி,

ஆரணி,

திருவள்ளூர்

புதுச்சேரி

விடுதலை சிறுத்தைகள் கட்சி

விழுப்புரம்,

சிதம்பரம்

மார்க்சிஸ்ட் கட்சி

மதுரை,

கோவை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

நாகை,

திருப்பூர்

மதிமுக

ஈரோடு

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

ராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

நாமக்கல்

இந்திய ஜனநாயக கட்சி

பெரம்பலூர்

திமுக:

தென்சென்னை

மத்தியசென்னை

வடசென்னை

ஸ்ரீபெரும்புதூர்

காஞ்சிபுரம்

அரக்கோணம்

சேலம்,

திருவண்ணாமலை

வேலூர்

தருமபுரி

நீலகிரி

பொள்ளாச்சி

திண்டுக்கல்

தஞ்சை

மயிலாடுதுறை

தூத்துக்குடி

நெல்லை

தென்காசி

கள்ளக்குறிச்சி

கடலூர்

மேலும் திமுக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வரும் 17-ம் தேதி அறிவிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Elections 2019, Lok Sabha Election 2019