ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

21 மாநகராட்சிக்கான மேயர், துணை மேயர் பட்டியலை வெளியிட்டது திமுக!

21 மாநகராட்சிக்கான மேயர், துணை மேயர் பட்டியலை வெளியிட்டது திமுக!

திமுக

திமுக

21 மாநகராட்சியிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்ற நிலையில், மேயர் பொறுப்பிற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், 20 மேயர் வேட்பாளர்கள் திமுகவும், 1 மேயர் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  திமுக சார்பாக போட்டியிடும்‌ மாநகராட்சி மேயர்‌ - துணை மேயர்‌ விவரத்தை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது. ‌

  தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற்றது. இதில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றனர். குறிப்பாக 21 மாநகராட்சிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது.

  இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் பதவிகள் விவகாரம் தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தி.மு.க மூத்த தலைவர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். காங்கிரஸ் கமிட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யுனிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் இந்த பேச்சுவார்த்தையில் தங்களுக்கு வேண்டிய இடங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

  இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்த நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்று திமுக தலைமை வெளியிட்டுள்ளது.

  அதன்படி, 4-9-2022 அன்று நடைபெற உள்ள மாநகராட்சி மன்ற மேயர்‌ - துணை மேயர்‌ தேர்தலில்‌ திமுக சார்பில்‌ பின்வரும்‌ வேட்பாளர்கள்‌ போட்டியிடுவார்கள்‌.

  சென்னை மாநகராட்சி

  மேயர்‌ - திருமதி. ஆர்‌. பிரியா

  துணை மேயர்‌ - திரு. மு. மகேஷ்‌ குமார்‌

  மதுரை மாநகராட்சி

  மேயர்‌ - திருமதி. இந்திராணி

  திருச்சி மாநகராட்சி 

  மேயர்‌ - திரு. மு. அன்பழகன்‌

  துணை மேயர்‌ - திருமதி. திவ்யா தனக்கோடி

  திருநெல்வேலி மாநகராட்சி

  மேயர்‌ - திரு. பி.எம்‌.சரவணன்‌

  துணை மேயர்‌ - திரு. கே.ஆர்‌.ராஜூ

  கோவை மாநகராட்சி

  மேயர்‌ - திருமதி. கல்பனா

  துணை மேயர்‌ - திரு. இரா. வெற்றிச்செல்வன்‌

  சேலம்‌ மாநகராட்சி

  மேயர்‌ - திரு. ஏ. இராமச்சந்திரன்‌

  திருப்பூர்‌ மாநகராட்சி

  மேயர்‌ - திரு. தினேஷ்‌ குமார்‌

  ஈரோடு மாநகராட்சி

  மேயர்‌ - திருமதி. நாகரத்தினம்‌

  துணை மேயர்‌ - திரு. செல்வராஜ்‌

  தூத்துக்குடி மாநகராட்சி 

  மேயர்‌  திரு. என்‌.பி.ஜெகன்‌,

  துணை மேயர்‌ - திருமதி. ஜெனிட்டா செல்வராஜ்‌

  ஆவடி மாநகராட்சி

  மேயர்‌ - திரு. ஜி. உதயகுமார்‌

  தாம்பரம்‌ மாநகராட்சி

  மேயர்‌ - திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன்‌

  துணை மேயர்‌ - திரு. ஜி. காமராஜ்‌

  காஞ்சிபுரம்‌ மாநகராட்சி

  மேயர்‌ - திருமதி. மகாலட்சுமி யுவராஜ்‌,

  வேலூர்‌ மாநகராட்சி

  மேயர்‌ - திருமதி. சுஜாதா அனந்தகுமார்‌

  துணை மேயர்‌ - திரு.சுனில்

  கடலூர்‌ மாநகராட்சி

  மேயர்‌ - திருமதி. சுந்தரி

  கும்பகோணம்‌ மாநகராட்சி

  துணை மேயர் - திரு. தமிழழகன்‌

  தஞ்சாவூர்‌ மாநகராட்சி

  மேயர்‌ - திரு. சண்‌. இராமநாதன்‌

  துணை மேயர்‌ - திருமதி. அஞ்சுகம்‌ பூபதி

  கரூர்‌ மாநகராட்சி

  மேயர்‌ - திருமதி. கவிதா கணேசன்‌

  துணை மேயர்‌ - திரு. தாரணி பி.சரவணன்‌

  ஒசூர்‌ மாநகராட்சி

  மேயர்‌ - திரு. எஸ்‌.ஏ.சத்யா

  துணை மேயர்‌ - திரு. சி.ஆனந்தைய்யா

  திண்டுக்கல்‌ மாநகராட்சி

  மேயர் - திருமதி. இளமதி

  துணை மேயர் - திரு. இராஜப்பா

   சிவகாசி மாநகராட்சி

  மேயர் -  திருமதி. சங்கீதா இன்பம்

  துணை மேயர் - திருமதி. விக்னேஷ்‌ பிரியா

  நாகர்கோவில்‌ மாநகராட்சி

  மேயர்‌ - திரு.மகேஷ்

  துணை மேயர்‌ - திருமதி. மேரி பிரின்சி

  கும்பகோணம் மாநகராட்சி

  கும்பகோணம் மாநகராட்சி மேயர் பொறுப்பிற்கு வேட்பாளராக திரு.கே.சரவணன் காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: DMK, Local Body Election 2022, Mayor