• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திமுக ஆட்சியில் திருப்தியில்லை. - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

திமுக ஆட்சியில் திருப்தியில்லை. - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

தமிழகத்தில் தடுப்பூசியே கிடையாது. 39 எம்.பியை வைத்து மத்திய அரசிடம் வலியுறுத்தி தடுப்பூசியை பெற முயற்சிக்காமல் திமுகவினர் வாய் பேசி கொண்டே இருக்கின்றனர்.

  • Share this:
    கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் திமுக செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்., அதிமுக கட்சி சார்பில் வருகிற 14-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற நிர்வாகிகள் கூட்டம் தலைமை கழகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கூட்டம் நடைபெற உள்ளதால் அதற்கு அனுமதி வேண்டி டி.ஜி.பி.யிடம் மனு அளித்துள்ளதாக கூறினார்.

    மேலும், கட்சியின் கட்டுப்பாட்டை யார் மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சூழலில், எதிர்கட்சிகள் தங்களை பற்றி விமர்சிக்க முடியாத அளவுக்கு கட்டுக்கோப்பாக அதிமுகவை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் நடத்தி வருவதாக அவர் கூறினார். அதிமுக கட்சியில் சசிகலா எப்போதும் இல்லை. இந்த நிலையே தொடரும்.அதிமுகவின் நிரந்தர பொதுசெயலாளர் ஜெயலலிதா தான், பொதுசெயலாளரை நியமிக்கும் எண்ணம் ஒரு போதும் இல்லை எனவும் கூறினார்.

    Also Read : தமிழகத்தில் 18,000-க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு... குறையாத உயிரிழப்பு

    மேலும் பேசிய அவர்,திமுகவினர் ஆட்சி பிடித்தது வெறும் 3 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் தான், எனவே இரட்டை தலைமையை பொதுமக்கள் விரும்புவதாக தான் அர்த்தம்,ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷம் தொண்டர்களிடம் எழவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழகத்தில் தடுப்பூசியே கிடையாது. 39 எம்.பியை வைத்து மத்திய அரசிடம் வலியுறுத்தி தடுப்பூசியை பெற முயற்சிக்காமல் திமுகவினர் வாய் பேசி கொண்டே இருக்கின்றனர். மேலும், டெஸ்ட் எடுக்காமல் கொரோனா குறைவதாக கூறுவது என்ன நியாயம்? உயிரிழப்பின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. தமிழகத்தில் ஊரடங்கை முறையாக அமல்படுத்தவில்லை என உயர்நீதிமன்றம் மறைமுகமாக குற்றம்சாட்டி வருவதாக அவர் தெரிவித்தார்.

    அதிமுக ஆட்சியின் போது இறப்பின் விகிதத்தை பதிவு செய்து வந்ததாகவும், திமுக வீண் விளம்பரங்களை செய்யாமல் கொரோனா இறப்பின் உண்மை தன்மையை முறையாக கொடுக்க வேண்டும். அதிமுக எதிரி கட்சி அல்ல எதிர் கட்சி. கொரோனாவினால் இறந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் தர வேண்டும் என எதிர்கட்சியாக இருந்த போது திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் தற்போது 1கோடியா தருகிறார். கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் திமுக செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என ஜெயகுமார் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: