Home /News /tamil-nadu /

தற்போதைய ஆட்சி உயர்கல்வி ஆராய்ச்சிக்கான பொற்காலம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தற்போதைய ஆட்சி உயர்கல்வி ஆராய்ச்சிக்கான பொற்காலம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் என்று இரண்டு தமிழக அமைச்சர்களை தந்தது ஜமால் முகமது கல்லூரி. திருச்சியின் முக்கிய அடையாளமாகவும் விளங்குகிறது என முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    பள்ளிக் கல்வியில் காமராஜர் ஆட்சி காலமும், கல்லூரிக் கல்வியில் கலைஞர் ஆட்சிக் காலமும் பொற்காலமாக இருந்ததை போல், இந்த ஆட்சிக் காலம் உயர்கல்வி ஆராய்ச்சியின் பொற்காலமாக இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    திருச்சி ஜமால் முகமது கல்லூரியில், கல்லூரி நிறுவனர் நாள் விழா, கல்லூரி வரலாற்றைத் தொகுக்கும் பெருந்திட்டத் தொடக்கவிழா, "குளோபல் ஜமாலியன்ஸ் பிளாக்" கட்டட அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழா, கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் இன்று நடைபெற்றது.

    திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்று, விழாவினைத் தொடங்கி வைத்தார். பின்னர், "குளோபல் ஜமாலியன்ஸ் பிளாக்'' கட்டடத்திற்கான  அடிக்கல் நாட்டினார்.வ் விழாவில், காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, "உடல்நிலை சரியில்லாத காரணத்தால், மருத்துவர் ஆலோசனைபடி ஓய்வெடுக்கிறேன். நேரில் பங்கேற்க இயலாததற்கு வருந்துகிறேன். நிச்சயம் ஒருநாள் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன்.

    கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் என்று இரண்டு தமிழக அமைச்சர்களை தந்தது ஜமால் முகமது கல்லூரி. திருச்சியின் முக்கிய அடையாளமாகவும் விளங்குகிறது. பள்ளிக் கல்வியில் காமராஜர் ஆட்சி காலமும், கல்லூரிக் கல்வியில் கலைஞர் ஆட்சிக் காலமும் பொற்காலமாக இருந்ததை போல், இந்த ஆட்சிக் காலம் உயர்கல்வி ஆராய்ச்சியின் பொற்காலமாக இருக்கும். அதற்கான செயல்பாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.
    இதையும் படிங்க: பாரதியார் பல்கலைக்கழகத்தில் Research Associate பணிக்கு காலியிடம் அறிவிப்பு
    விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசியர் கே.எம்.காதர் மொய்தீன் உள்பட, கல்லூரியின் முன்னாள், இந்நாள் பேராசிரியர்கள், முன்னாள், இந்நாள் மாணவ, மாணவியர் என, 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: CM MK Stalin, Education

    அடுத்த செய்தி