ஊரக உள்ளாட்சி தேர்தல் : திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு

அண்ணா அறிவாலையம்

விருப்ப மனுக்களை திமுக மாவட்ட செயலாளரிடமோ அல்லது அண்ணா அறிவாலயத்திலோ ஒப்படைக்கலாம் என அறிவிப்பு.

 • Share this:
  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ஆகிய தேதிகளில் நடைபெறுவுற்ற நிலையில், இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

  தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்தமாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.

  இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக சார்பில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருக்கு ரூ.10 ஆயிரம், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பெண்கள் பாதித்தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். விருப்ப மனுக்களை திமுக மாவட்ட செயலாளரிடமோ அல்லது அண்ணா அறிவாலயத்திலோ ஒப்படைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அக்டோபர் 6 மற்றும் 6 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. அலுவலக நாட்களில் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Must Read : ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடக்கம்

  வரும் 22ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும், அதற்கு அடுத்த நாளே வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: