ஒன்றிய செயலாளர்கள் நீக்கம் - சிவகங்கை மாவட்ட திமுகவை கண்டித்து தொண்டர்கள் போராட்டம்

திமுக தொண்டர்கள் போராட்டம்

காளையர் கோவில் திமுக ஒன்றிய செயலாளர்கள் நீக்கத்தை கண்டித்து திரண்ட திமுக தொண்டர்கள், மாவட்ட செயலாளர் பெரிய கருப்பன் உருவ மொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

  • News18
  • Last Updated :
  • Share this:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோலில் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் மேப்பல் சக்தி என்ற சத்தியநாதன் மற்றும்  மார்த்தாண்டன் உள்ளிட்டவர்களை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியதற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீக்கலுக்கு மாவட்ட செயலாளர் பெரியகருப்பன்தான் காரணம் என்றும், உட்கட்சி பூசலால் நேர்மையான முறையில் விசாரணை நடத்தாமல் திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும், நடவடிக்கையை  மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் மாவட்ட திமுகவை கண்டித்தும் 500க்கும் மேற்பட்டவர்கள் காளையார்கோவில் கோவில் திடலில்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பெரிய கருப்பன் உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தினர். இதனை அடுத்து, அவர்களை போலீசார் தடுத்தனர்.
Published by:Sankar
First published: