சென்னை ஐஐடி மாணவி தற்கொலை... நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக மாணவரணி போராட்டம்...!

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை... நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக மாணவரணி போராட்டம்...!
போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.
  • News18
  • Last Updated: November 15, 2019, 2:54 PM IST
  • Share this:
சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

கேரளாவைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீப் என்ற மாணவி கடந்த 9-ம் தேதி சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். மத ரீதியாக பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக மாணவியின் செல்போனில் குறிப்புகள் இருந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு திமுக மாணவர் அணி சார்பில் சென்னை ஐஐடி வாயிலில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.


இதே போல, மாணவி ஃபாத்திமாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஐஐடி வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Also see...
First published: November 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading