ஆர்.எஸ்.பாரதி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த திமுக எம்.எல்.ஏ-க்கள் உட்பட 96 நபர்கள் மீது வழக்குப்பதிவு..!

DMK | RS Bharathi | பட்டியலின மக்கள் குறித்து ஆர்.எஸ் பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது

ஆர்.எஸ்.பாரதி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த திமுக எம்.எல்.ஏ-க்கள் உட்பட 96 நபர்கள் மீது வழக்குப்பதிவு..!
ஆர்.எஸ்.பாரதி
  • Share this:
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைதை கண்டித்து எழும்பூரில் உள்ள நீதிபதி குடியிருப்பு வளாகத்துக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ-க்கள் உட்பட 96 நபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற கலைஞர் வாசகர் வட்ட கூட்டத்தில் பட்டியலின மக்கள் குறித்து ஆர்.எஸ் பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிபதிகள் மற்றும் பட்டியல் இனமக்களை அவமதிக்கும் வகையில் அவர் பேசியதாகவும், ஆர்.எஸ் பாரதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆதித் தமிழர் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதை தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப்பதிவு செய்த தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் மாற்றப்பட்டது. இதனடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் நேற்று(23-05-2020) அதிகாலை சென்னை ஆலந்தூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து  ஆர்,எஸ் பாரதியை கைது செய்தனர்.


பின்னர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட ஆர்.எஸ் பாரதியிடம், காலை சுமார் 8 மணி வரை போலீசார் விசாரணை செய்தனர். அதன் பின்பு எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு அரசு பாரதி ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் வழக்கை ரத்து செய்ய கோரிய மனு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் எந்தவித நிபந்தனையும் இல்லாமல், ஆர்.எஸ்.பாரதியை, நீதிபதி ஜாமினில் விடுதலை செய்தார்.

இதற்கிடையே ஆர் எஸ் பாரதி கைதை கண்டித்து திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் எழும்பூரில் உள்ள நீதிபதி குடியிருப்புக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் எம்.எல்.ஏ-க்கள் ரவிச்சந்திரன், ராஜா ரங்கநாதன் உள்பட 96 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், தொற்றுநோய் பரப்புதல், தெரிந்தே பிறருக்கு தொற்று நோய் ஏற்படுத்தும் செயல் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading