திருப்பூர்: வேளாண் சட்டங்களை எதிர்த்து நூதன முறையில் போராட்டம்; 500க்கும் மேற்பட்டோர் கைது

திருப்பூர்: வேளாண் சட்டங்களை எதிர்த்து நூதன முறையில் போராட்டம்; 500க்கும் மேற்பட்டோர் கைது

திருப்பூர்: வேளாண் சட்டங்களை எதிர்த்து நூதன முறையில் போராட்டம்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் மாட்டு வண்டியுடன் காய்கறி மாலை அணிந்து கருஞ்சட்டையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவளித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ரயில் நிலையம் அருகே திமுகவினர் மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் கறுப்புக் கொடி ஏந்தி கருஞ்சட்டை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகளை மத்திய அரசு நசுக்கி வருவதாக குற்றஞ்சாட்டி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து, மாட்டு வண்டியுடன் காய்கறி மாலை அணிந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், வேளாண் சட்டங்களை ரத்து செய்து நிரந்தரத் தீர்வு தரும் வரை தங்களது போராட்டத்தைக் கைவிடமாட்டோம் என்று கூறி, திமுகவினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published:

சிறந்த கதைகள்