CAA-வை திரும்பப் பெறக்கோரி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த மு.க ஸ்டாலின்...!

CAA-வை திரும்பப் பெறக்கோரி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த மு.க ஸ்டாலின்...!
  • News18
  • Last Updated: February 2, 2020, 12:15 PM IST
  • Share this:
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை முதல் கையெழுத்திட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று அறிவித்தது.

இந்த நிலையில், இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அதனை தொடங்கி வைத்தார். கொளத்தூர் தொகுதிக்கு உள்பட்ட திரு.வி.க.நகர், பெரம்பூர், ஜி.கே.எம்..காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று அவர் பொதுமக்களிடம் (சுமார் 2 மணி நேரம்) கையெழுத்து பெற்றார்.


இன்று முதல் வரும் 8-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி ஒரு கோடி கையெழுத்து பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனை அனைத்துக் கட்சி தலைவர்களும் சேர்ந்து குடியரசு தலைவரை சந்தித்து கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

மேடையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “நேற்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் ஏழை, எளியோர், சிறுபான்மை மக்கள் , பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த பயனும் இல்லாமல் இருக்கிறது. பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுகான பட்ஜெட்டாக தான் இருந்தது.கார்ப்பரேட் கம்பெனிகளின் வருமான கணக்கை காட்டுவது போன்று நிதியமைச்சர் இந்த பட்ஜெட்டை படித்துள்ளார்.

பொருளாதாரத்தை முன்னேற்ற எந்த திட்டமும் இல்லை. வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகளும் இல்லை. அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் பட்ஜெட்டாகத் தான் நேற்றைய பட்ஜெட் இருந்தது.

நம்முடைய பிறந்தநாள் தேதியே ஒரு சில நேரங்களில் நமக்கு குழப்பமாக உள்ளது. இதில் நம் தந்தை, அவரின் தந்தை என அவர்களின் பிறந்த தேதியை எப்படி நினைவில் வைத்துக்கொள்ள முடியும். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பாஜகவின் கூட்டணி கட்சிகளில் சிலர் தற்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கேரளாவில் ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் இணைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். ஆனால் இதனை செய்ய தமிழக அரசு தயங்குகிறது. அவர்கள் சிறைக்கு செல்லாமல் இருப்பதற்காக இதனை அவர்கள் செய்யாமல் உள்ளனர்” என்று கூறினார்.

மேலும், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய மக்கள் கணக்கெடுப்பு பதிவேட்டை நடத்த கூடாது என்று அவர் கூறினார்.
First published: February 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்