ஊழலில் நம்பர் 1 அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: ஸ்டாலின் விமர்சனம்

மு.க.ஸ்டாலின்

ஊழல் செய்வதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சர் பழனிசாமியை முந்திவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 • Share this:
  கடலூர் மாவட்டம் பாரதிக்குப்பம் ஊராட்சியில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில், திமுகவின் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்ட பொதுமக்கள், சாலை வசதி, சிப்காட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

  பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின் ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பதாகவும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீத முன்னுரிமை என பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசியவர், அதிமுக ஆட்சியில் ஊழல் செய்வதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சர் பழனிசாமியை முந்திவிட்டதாக கடுமையாக விமர்சித்தார்.

  மேலும் படிக்க...அரசு தரும் ரூ.2,500 பொங்கல் பரிசு டாஸ்மாக் மூலம் அரசுக்கே வரும்..  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: