முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பேரறிஞர் அண்ணா என்றும் வாழ்கிறார்... இன்றும் ஆள்கிறார் - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

பேரறிஞர் அண்ணா என்றும் வாழ்கிறார்... இன்றும் ஆள்கிறார் - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மு.க.ஸ்டாலின் கடிதம்

மு.க.ஸ்டாலின் கடிதம்

சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றி, அதனைத் தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக்கிய கொள்கை வீரர்: திமுக தலைவர் மு.க ஸ்டாலின்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பேரறிஞர் அண்ணா என்றும் வாழ்கிறார், இன்றும் ஆள்கிறார் என தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பிப்ரவரி 3, அண்ணாவின் நினைவு தினைத்தை முன்னிட்டு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில், தென்னாட்டு காந்தி, இந்நாட்டு இங்கர்சால், தமிழ்நாடு கண்ட பெர்னாட்ஷா, மற்றொரு கார்ல் மார்க்ஸ் என உலகப் பேரறிஞர்கள் பெருந்தலைவர்களுடன் அண்ணாவை ஒப்பிட்டு புகழ்ந்துள்ளார்.

1969-ஆம் ஆண்டு நம்மை கண்ணீர்க் கடலில் மிதக்கவிட்டு, வங்கக் கடலோரம் மீளாத்துயில் கொள்ளச் சென்றுவிட்டார் பேரறிஞர் அண்ணா என வருத்தம் தெரிவித்தார்.

இந்தி ஆதிக்கத்திற்கு இந்த மண்ணில் இடமில்லை என்று தமிழ் - ஆங்கிலம் எனும் இருமொழிக் கொள்கையை நிலைநாட்டிய போராளி, சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றி, அதனைத் தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக்கிய கொள்கை வீரர் என அண்ணாவைப் புகழ்ந்தார்.

எத்திசையும் பேரறிஞர் அண்ணா எனும் பேரொளி பரவட்டும். இருள் விலகட்டும். இந்தியா விடியட்டும் என்று கூறிய முதலமைச்சர், அண்ணா நினைவு நாளான்று, சென்னையில் நடைபெறும் அமைதிப் பேரணி, அதற்கான தொடக்கமாக அமையட்டும் என கடித்தத்தில் தெரிவித்தார்.

First published:

Tags: CM MK Stalin