Home /News /tamil-nadu /

நியூஸ்18செய்தி எதிரொலி : அரியவகை முகச்சிதைவு நோயால் அவதிப்படும் 9வயது சிறுமி.. இலவசமாக சிகிச்சை அளிக்க முன்வந்த தனியார் மருத்துவமனை

நியூஸ்18செய்தி எதிரொலி : அரியவகை முகச்சிதைவு நோயால் அவதிப்படும் 9வயது சிறுமி.. இலவசமாக சிகிச்சை அளிக்க முன்வந்த தனியார் மருத்துவமனை

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி

மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் டாண்யாவை வில்லிவாக்கம் திமுக ஒன்றிய செயலாளர் துரை வீரமணி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரி நகரை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதிகள்.இவர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணமாகி மகள், மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகள் டானியாவுக்கு 9 வயதாகிறது. டானியா வீராபுரம் அரசினர் பள்ளியில் 4ம் வகுப்பு கல்வி பயின்று வருகிறார். எல்லா குழந்தைகளும் போல டானியாவும் 3 வயதுவரை இயல்பாக வளர்ந்து வந்துள்ளார். பின்னர் குழந்தை டேனியாவின் முகத்தில் தோன்றிய கரும்பு புள்ளி அவருடைய வாழ்க்கை முழுவதுமாக தலைகீழாக புரட்டி போட்டுள்ளது.

    டானியாவின் முகத்தில் கரும்புள்ளி போன்று தோலில் தோன்றியுள்ளது. இதனை முதலில் சாதாரண ரத்தக்கட்டு என நினைத்த பெற்றோர்கள் கடந்த 2017ம் ஆண்டுமுதல் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை உட்பட 6க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை நாடி தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் அந்த பாதிப்பானது குறைந்த பாடில்லை. இதனால் டானியாவின் பெற்றோரான ஸ்டீபன் ராஜ் சௌபாக்யா தம்பதியினர் தங்களது சக்திகளுக்கு மேலாக கடன் பெற்று செலவு செய்தும் மருத்துவம் பார்த்து வந்து நிலையில் எந்த பயனும் இல்லை.

    நாட்கள் போக போக டானியாவின் முகம் வலது கண்ணம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதைவு ஏற்பட தொடங்கியுள்ளது. இதனால் குழந்தையின் அழகிய முகம் மிகவும் பாதிப்படைந்தது. உடன் பயிலும் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கி அன்பை புகட்ட வேண்டிய ஆசிரியர்களோ ஒரு படி மேலே சென்று டானியாவை அவருக்குள்ள குறைபாடுகளை காரணம் காட்டி வெறுத்து ஒதுக்கி தனிமைப்படுத்தி உள்ளனர்.



    கடந்த 6 ஆண்டுகளாக சிறுமி அவதிப்பட்டு வருவது குறித்து, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. அதனை அடுத்து சிறுமியின் வீட்டிற்குச் சென்ற திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சிறுமிக்கு சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    தண்டலம் பகுதியில் உள்ள சவிதா மருத்துவமனை, சிறுமிக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்க முன் வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் டாண்யாவை வில்லிவாக்கம் திமுக ஒன்றிய செயலாளர் துரை வீரமணி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கினர். சிறுமிக்கு, வரும் திங்கட்கிழமை அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: DMK, News18 Impact, Thiruvallur

    அடுத்த செய்தி