Exclusive: திமுக எம்.எல்.ஏக்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர் - பாஜக துணைத் தலைவர் வி. பி. துரைசாமி

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் வி. பி. துரைசாமி கூறியுள்ளார்.

Exclusive: திமுக எம்.எல்.ஏக்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர் - பாஜக துணைத் தலைவர் வி. பி. துரைசாமி
பாஜக துணைத் தலைவர்  வி.பி. துரைசாமி.
  • Share this:
கடந்த மே மாதம் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி. துரைசாமி தற்போது அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக உள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, திமுகவில் இருக்கும் 60 மாவட்டங்களிலும் ஏராளமானோர் அதிருப்தியில் உள்ளனர். அதேபோல திமுக எம்.எல்.ஏக்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். அதற்குக் காரணம் திமுகவின் குடும்ப அரசியல்தான் என்று கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலினின் செயல்பாடு ஏற்புடையதாக இல்லை; கந்த சஷ்டி விவகாரத்தில் அவர்தான் முதன்முதலில் குரல் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறிய அவர், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை அனுசரித்துச் செல்லும் கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும் எனவும் கூறினார்.

வி.பி.துரைசாமியும் கு.க.செல்வமும் கட்சிப் பதவி கிடைக்காமல்தான் வெளியேறினார்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், யார் யாருக்கு எதை வழங்க வேண்டும் என தற்போதைய தலைவருக்குத் தெரியவில்லை. மாட்டுக்கு புல்லு வைக்க வேண்டும், ஆட்டுக்கு எள்ளு வைக்க வேண்டும் என்றார்.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading