தி.மு.கவில் 21-ம் தேதி உள்கட்சித் தேர்தல்! அறிவிப்பு வெளியிட்டுள்ள தலைமைக் கழகம்

தி.மு.கவில் 21-ம் தேதி உள்கட்சித் தேர்தல்! அறிவிப்பு வெளியிட்டுள்ள தலைமைக் கழகம்
அறிவாலயம்
  • Share this:
திமுகவில் உள்கட்சித் தேர்தல் வரும் 21-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.

தி.மு.க உள்கட்சித் தேர்தல் தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘1949-ம் ஆண்டு தொடங்கி உள்கட்சி அமைப்புகள் முதல் தலைமைக் கழகம் வரை ஜனநாயக அடிப்படையில் முறையாக இதுவரை 14 பொதுத் தேர்தல்களை நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்த சிறப்புக்குரிய இயக்கம் தி.மு.க ஆகும்.

கழக சட்டத்திட்டங்களின்படி, பல கட்டங்களாக கழக அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெறும். முதல் கட்டமாக கிளைக் கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். முதல் கட்டமாக கிளைக் கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும்.


அதனைத் தொடர்ந்து பேரூர் கழகம் மற்றும் மாநகர வட்டக் கழகத் தேர்தல்கள், அதன் தொடர்ச்சியாக, ஒன்றிய நகர மாநகரப் பகுதிக் கழகத் தேர்தல்களும் பின்னர் மாநகரக் கழகத் தேர்தல் நடைபெறும்.

இவற்றைத் தொடர்ந்து மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழகப் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெற்ற பின்னர், புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர் பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் கழகத் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see:

 

 
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்