போக்குவரத்துத்துறை எந்த ஜென்மத்திலும் லாபத்தில் இயங்காது - துரைமுருகன்

மினி பஸ் சேவையை கிராம பகுதிகளில் நிறுத்தப்படவில்லை என்றும், பேருந்துகள் இயங்காத வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க யாரும் முன்வராத காரணத்தால் 1500 பர்மிட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

news18
Updated: July 11, 2019, 12:45 PM IST
போக்குவரத்துத்துறை எந்த ஜென்மத்திலும் லாபத்தில் இயங்காது - துரைமுருகன்
துரைமுருகன்
news18
Updated: July 11, 2019, 12:45 PM IST
போக்குவரத்துத்துறை எந்த ஜென்மத்திலும் லாபத்தில் இயங்காது என சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசியுள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் கோ.வி.செழியன், போக்குவரத்துத்துறையால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மினிபஸ் சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என கோரினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், போக்குவரத்து துறை கடுமையாக நிதி நெருக்கடியில் உள்ள சூழலில் மினி பஸ் தேவையில்லாத ஒன்று என பதிலளித்தார்.

உடனடியாக குறுக்கிட்ட எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், கிராமங்களில் உட்பகுதிகளில் மிகவும் குறுகலான சாலைகள் உள்ளது. அதில் பெரிய பேருந்துகள் செல்ல முடியாதது காரணமாகவே மினி பஸ் சேவை துவங்கப்பட்டது என்றும், எந்த ஜென்மத்திலும் போக்குவரத்து துறை லாபத்தில் இயங்காது என்றும் துரைமுருகன் தெரிவித்தார்.

எனவே லாப நோக்கம் பார்க்காமல் மக்களுக்கு சேவை மனப்பான்மையோடு சேவை செய்ய வேண்டும் எனவும் சட்டப்பேரவையில் துரைமுருகன் கூறினார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மினி பஸ் சேவையை கிராம பகுதிகளில் நிறுத்தப்படவில்லை என்றும், பேருந்துகள் இயங்காத வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க யாரும் முன்வராத காரணத்தால் 1500 பர்மிட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் பேருந்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும், பேருந்துகள் அதிகம் இயங்கும் வழித்தடங்களில் மட்டுமே மினி பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.

Also see...

First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...