ஸ்டாலினை விமர்சிப்பதா? திமுக கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டு துரைமுருகன் பதிலடி!

திமுக தலைவர் ஸ்டாலினின் சாதனைகள் தெரியாமல் முதலமைச்சர் அவர் குறித்து குறை கூற வேண்டாம் என்று துரைமுருகன் வலியுறுத்திள்ளார்.

ஸ்டாலினை விமர்சிப்பதா? திமுக கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டு துரைமுருகன் பதிலடி!
துரைமுருகன்
  • News18
  • Last Updated: September 13, 2019, 5:06 PM IST
  • Share this:
பொதுப்பணித்துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முந்தைய ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் பற்றி தெரியாமல் இருப்பது வெட்கக்கேடானது என்று திமுக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1967 முதல் 2011 வரை சின்னாறு, பொன்னியாறு, கருப்பாநதி உள்ளிட்ட 41 அணைகள் கட்டப்பட்டனர்.

தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியை திமுக ஆட்சியில் கொண்டு வந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.


ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், 5,42,000 கோடி முதலீடு வரப் போகிறது என்று 'பகட்டு' அறிவிப்பை வெளியிட்ட நிலையில்,

தற்போது, 14,000 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளதை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி அம்பலமாகியுள்ளதை முதலமைச்சர் மறுக்க முடியுமா என துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மு.க.ஸ்டாலின், ஜப்பான் சென்று சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தையும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்திற்கு நிதி திரட்டி வந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, திமுக தலைவர் ஸ்டாலினின் சாதனைகள் தெரியாமல் முதலமைச்சர் அவர் குறித்து குறை கூற வேண்டாம் என்று துரைமுருகன் வலியுறுத்திள்ளார்.

Also see...

First published: September 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்