Home /News /tamil-nadu /

ஒரு ரூபாய் கூட மக்களுக்கு நிவாரணம் தராதது திமுக அரசுதான்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

ஒரு ரூபாய் கூட மக்களுக்கு நிவாரணம் தராதது திமுக அரசுதான்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

குற்றம் சொல்வது தான் ஸ்டாலினுக்கு வாடிக்கை எனவே அதைப் பற்றி எங்களுக்கு எந்தவித கவலையும் இல்லை. கடந்த பேரிடர் காலங்களில் நிவாரணத்தொகை முழுமையாக அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஜெயக்குமார் கூறினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
    நிஷா புயலின் போது திமுக யாருக்கும் ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

    கவிஞர் சுரதாவின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அசோக் பில்லர் அருகே உள்ள அவரது சிலைக்கு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கஜா புயல் நிவாரணப் பணிகளில் எந்தவித தாமதமும் ஏற்படவில்லை. சுனாமியை விட மிகப்பெரிய பேரழிவு கஜா புயலால் நிகழ்ந்துள்ளது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர்ச்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    மேலும், இதுவரை எந்தப் புயலிலும் ஏற்படாத அளவிற்கு ஒரு லட்சம் மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. அவை உடனடியாக சரி செய்யப்பட்டு வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் இன்னும் ஓரிரு நாட்களில் சகஜ நிலை திரும்பி விடும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசு உடனடியாக பாதிக்கப்பட இடங்களை ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளது. தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    மேலும், குற்றம் சொல்வது தான் ஸ்டாலினுக்கு வாடிக்கை எனவே அதைப் பற்றி எங்களுக்கு எந்தவித கவலையும் இல்லை. கடந்த பேரிடர் காலங்களில் நிவாரணத்தொகை முழுமையாக அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய ஜெயக்குமார், நிஷா புயலின் போது திமுக யாருக்கும் ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Cyclone Gaja, Minister Jayakumar

    அடுத்த செய்தி