ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திமுக நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு : தயாநிதி மாறன், கதிர் ஆனந்த் எம்.பி-க்கு புதிய பொறுப்பு!

திமுக நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு : தயாநிதி மாறன், கதிர் ஆனந்த் எம்.பி-க்கு புதிய பொறுப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களாக மு.க.ஸ்டாலின் உடன் கே.என் நேரு உள்ளிட்டோர் நியமனம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட மொத்தம் 29 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களாக மு.க.ஸ்டாலின் உடன், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைமைக் கழக நிர்வாகிகளில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும், சட்ட தலைமை ஆலோசகராக வில்சன் எம்.பி-யும், சட்டத் துறை தலைவராக வழக்கறிஞர் விடுதலையும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: கனிமொழி எம்.பியின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்... தூத்துக்குடியில் பரபரப்பு..!

மேலும், கொள்கை பரப்புச் செயலாளர்களாக திருச்சி சிவா, திண்டுக்கல் ஐ.லியோனி, ஜெகத்ரட்சகன் எம்.பி. மற்றும் சபாபதி மோகன் ஆகிய 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அமைப்பு சாரா ஓட்டுநர் மற்றும் விளையாட்டு துறையை மேம்படுத்தி புதிதாக இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், அமைப்பு சாரா ஓட்டுநர் அணிக்கான தலைவராக கதிர் ஆனந்த் எம்.பி.யும், விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி.-யும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

First published:

Tags: DMK, MK Stalin