ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அறுந்து தொங்கும் குஜராத் மாடல்... அண்ணாமலைகள் இதற்கெல்லாம் வாயைத் திறக்க மாட்டார்கள் - முரசொலி கடும் விமரசனம்!

அறுந்து தொங்கும் குஜராத் மாடல்... அண்ணாமலைகள் இதற்கெல்லாம் வாயைத் திறக்க மாட்டார்கள் - முரசொலி கடும் விமரசனம்!

குஜராத் மாடலின் என்ற ஒட்டுமொத்த கருத்தோட்டத்தை கேள்வி கேட்கும் விதமாக, மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு சமூக அவலங்களை கட்டுரை விவரத்துள்ளது. 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  குஜராத் மாநிலம் மோர்பியல் தொங்கு பாலம் (Morbi Bridge collapse) விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து அண்ணாமலைகள் வாய்த் திறப்பதில்லை என்ற முரசொலி நாளிதழ் குற்றஞ்சாட்டியுள்ளது.

  தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இதுவரை 140க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. இறந்தவர்களில் பெரும்பாலனோர் குழந்தைகளும், வளரிளம் பருவத்தினர் என்று அறியப்படுகிறது.

  இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து முரசொலி நாளிதழில் தலையங்க கட்டுரை வெளிவந்துள்ளது. தொங்கு பாலம் அறுந்து விழுந்ததன் மூலம்  குஜராத் மாடலின் உண்மைத்தன்மைகளை ஒட்டுமொத்த நாடும் அறிந்து கொண்டதாக கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சம்பவம் குறித்து பேசுகையில், குஜராத் மாடல் என்று பீற்றிக் கொள்கிறார்களே, அது என்ன என்பதை மோர்பி நகர் மச்சு ஆற்றில் தொங்கும் பாலம் அறுந்து தொங்கியதன் மூலமாக இந்தியா அறிந்து கொண்டது. இவர்களது அரசியல் அலட்சியத்துக்கு அப்பாவிப் பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் பலியான துயரம் தான் சோகமானது என்று கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் வாசிக்க:  குஜராத் தொங்கு பாலம் விபத்து.. உச்சநீதிமன்றம் விசாரணை!

  மேலும் அந்த கட்டுரையில், 1879 ல் கட்டப்பட்ட மோர்பி பாலத்தை மீண்டும் செப்பனிட்டு தனது சாதனையாகக் காட்ட நினைத்தது ஆளும் பாஜக அரசு, குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால் பாலத்தை அவசர அவசரமாக திறந்துள்ளார்கள். இதனை உடனடியாக திறப்பதற்கு துறையின் அதிகாரிகள் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .

  பாலத்தின் பராமரிப்பைக் கொண்டு வரும் நிறுவனத்தின் மேலாளர், அனுமதிச் சீட்டு விற்பனையாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ள விபத்துக்கான முழு பொறுப்பையும் பாஜக அரசு ஏற்க வேண்டும். நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரா வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.  "வாய்கிழியப் பேசும் அண்ணாமலைகள் இதற்கெல்லாம் வாயைத் திறக்க மாட்டார்கள்" என்றும் ஆதங்கம் தெரிவித்துள்ளது. 

  குஜராத் மாடலின் என்ற ஒட்டுமொத்த கருத்தோட்டத்தை கேள்வி கேட்கும் விதமாக, மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு சமூக அவலங்களை கட்டுரை விவரத்துள்ளது. 

  இதையும் வாசிக்க: Rain News Live: வடமாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

  போதைப் பொருள் மையமாக இருக்கிறது குஜராத்.; கள்ள நோட்டுகளின் குவியலாக இருக்கிறது குஜராத்;  மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கடந்த ஜூலை மாதம் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியானர்கள்; கூட்டுப்பாலியல் செய்து கொன்றதால் தண்டனை பெற்ற 11 பேரை விடுதலை செய்தது அந்த மாநில அரசு; லாக் அப் மரணங்கள் அதிகம் நடக்கும் மாநிலமாக குஜராத் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

  பாலம் அறுந்து அப்பாவிகளைப் பலியிடுவதுதான் குஜராஜ் மாடல் என்றால், சப்பாத்திக்கு உப்பு வைத்து மாணவர்களைச் சாப்பிட வைப்பது தான் உ.பி.யோகி மாடல் ஆகும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் உ.பி.போலவும், குஜராத் போலவும் மாற்றுவதற்க்குத்தான் துடிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Gujarat, Murasoli