Home /News /tamil-nadu /

திமுக முப்பெரும் விழா : டி.ஆர்.பாலுவிற்கு கலைஞர் விருது.. பெரியார், அண்ணா விருதும் வழங்கியும் ஸ்டாலின் பாராட்டு

திமுக முப்பெரும் விழா : டி.ஆர்.பாலுவிற்கு கலைஞர் விருது.. பெரியார், அண்ணா விருதும் வழங்கியும் ஸ்டாலின் பாராட்டு

மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு

மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு

திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் பங்கேற்று “கலைஞரின் கடிதங்கள் தொகுப்பு” மற்றும் “திராவிட மாடல்” தொகுப்பு நூல்களை வெளியிட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
    திமுக முப்பெரும் விழா இன்று விருதுநகரில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதில் திமுகவின் முன்னோடிகளுக்கு விருது வழங்கி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு உரையாற்றினார்.

    பெரியார், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியற்றை கருத்தில் கொண்டு திமுகவின் முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் நடைபெறும்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில், திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் பங்கேற்று “கலைஞரின் கடிதங்கள் தொகுப்பு” மற்றும் “திராவிட மாடல்” தொகுப்பு நூல்களை வெளியிட்டார்.

    இதனையடுத்து, திமுகவின் முன்னோடி தலைவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

    டி.ஆர்.பாலு - கலைஞர் விருது

    சி.பி.திருநாவுக்கரசு - பாவேந்தர் பாரதிதாசன் விருது

    கோவை இரா மோகன் - அண்ணா விருது

    சம்பூர்ணம் சாமிநாதம் - பெரியார் விருது

    குன்னூர் சீனிவாசன் - பேராசிரியர் விருது

    இதையும் வாசிக்க: சாதிய வன்முறைக்கு காரணம் மனு தர்மம் தான்.. ஆ.ராசாவிற்கு ஆதரவாக களமிறங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்!

    பின்னர் சிறப்புரையாற்றிய முதலமைச்சர், இந்தியாவிற்கே முன்னோடி திட்டமான காலை உணவு திட்டத்தையும் திமுகவின் முப்பெரும் விழாவையும் ஒரே நாளில் நடத்துவது குறித்து பெருமிதம் தெரிவித்தார். மேலும் இது தன் வாழ் நாளில் பொன்நாள் எனவும் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் திமுகவின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர், நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றனர்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Anna, CM MK Stalin, DMK, DMK Karunanidhi, Periyar

    அடுத்த செய்தி