ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

60 நாட்கள் பொறுங்கள்...என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கத்தானே போகிறீர்கள்...ஆளுநரை எச்சரித்த டி.ஆர்.பாலு

60 நாட்கள் பொறுங்கள்...என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கத்தானே போகிறீர்கள்...ஆளுநரை எச்சரித்த டி.ஆர்.பாலு

டி.ஆர்.பாலு - ஆளுநர் ஆர்.என்.ரவி

டி.ஆர்.பாலு - ஆளுநர் ஆர்.என்.ரவி

அடுத்த 60 நாட்கள் காத்திருப்போம்...அதற்கு மேல் என்ன நடக்க போகிறது என்பதைப் பார்க்கத்தான் போகின்றீர்கள்...ஆளுநருக்கு டி.ஆர்.பாலு எச்சரிக்கை. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மறைந்த முன்னாள் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சென்னை அம்பத்தூர் பாடியில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு , அமைச்சர் சேகர்பாபு , சட்டமன்ற கொறடா கோவி.செழியன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு  பேராசிரியர் அன்பழகன் தங்களின் ரத்தத்திலும் , உயிர் அணுக்களிலும் கலந்து இருக்கின்றார். அமைச்சர் சேகர்பாபுவிடம் எதை சொன்னாலும் No என்று சொல்லவே மாட்டார். முடித்து காட்டுவார். ஆலயப் பணியினை சிறப்பாக செய்து வருகிறார் என்று  பாராட்டினார்.

சுயமரியாதை பிரச்சாரத்தில் ஒவ்வொருவரும் தனி மனித ஒழுக்கத்துடன் ஈடுபட  வேண்டும் என பேசிய டி.ஆர்.பாலு, காவல் துறை பணியில் இருந்த ஒருவர் இங்கு ஆளுநராக வந்துள்ளார்.  நேர்மையும், தூய்மையும் இல்லாத ஒரு நபர் ஆளுநராக உள்ளார் என ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும்

ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனம் தான் பெரியது என சொல்கின்றார். புதிய கல்வி கொள்கை, நீட் ஆகியவை தேவை என சொல்ல கவர்னர் யார்?  என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு,  தேசிய கீதம் பாடும் போது திராவிட உத்கல வங்கா என்று வரும் போது ஆளுநரே தைரியம் இருந்தால் உட்கார்ந்து பாருங்கள். பாஜக ஆட்சி இனி தொடராது.  காங்கிரஸ் கட்சி சாதாரண கட்சி இல்லை. மிகப்பெரிய கட்சி. இப்போது இப்படி இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக மீண்டும் உயரத்தில் வரும் என்கின்ற நம்பிக்கை உள்ளது எனக் கூறினார்.

காங்கிரஸ் கட்சி கொஞ்சம் ஒத்துழைத்தால் போதும்.

361|4 அரசியலமைப்பு சட்டம் ஆளுநர் மேல் தொங்கிகொண்டு இருக்கின்றது. நீங்கள் ஒன்றும் அசைத்து பார்க்க முடியாத ஆள் இல்லை ஆளுநரே. நாளை அல்லது நாளை மறுநாள் நோட்டீஸ் அனுப்பப்படும். அடுத்த 60 நாட்கள் காத்திருப்போம்.  அதற்கு மேல் என்ன நடக்க போகிறது என்பதைப் பார்க்கத் தான் போகின்றீகள் எனவும் ஆளுநருக்கு டி.ஆர்.பாலு எச்சரிக்கை விடுத்தார்.

First published:

Tags: RN Ravi, T.r.balu