பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு கோரிக்கை வைத்தார். 2017ம் ஆண்டு முதல் 2019 வரை 4,478 இளநிலை மற்றும் மேற்படிப்பு மருத்துவ இடங்களை தமிழகம் பொதுப்பிரிவினருக்கு வழங்கியும் அதில் ஒரு இடம்கூட பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்படவில்லை என்று அவர் ஆதங்கம் தெரிவித்தார்.
Also read: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி
பட்டியலின மாணவர்களுக்கு தரப்படும் 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், 15 விழுக்காடு மட்டுமே தரப்படுகின்றது என்றும் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார். இந்த விசயங்களில் மத்திய அரசு உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்த டி.ஆர்.பாலு, பிற்படுத்தப்பட்டோருடைய வருமான உச்ச வரம்பை 8 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: OBC Reservation, T.r.balu