முகப்பு /செய்தி /தமிழ்நாடு / புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரம் - பீகார் முதல்வரைச் சந்தித்து டி.ஆர்.பாலு விளக்கம்

புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரம் - பீகார் முதல்வரைச் சந்தித்து டி.ஆர்.பாலு விளக்கம்

டி.ஆர்.பாலு, நிதிஷ் குமார்

டி.ஆர்.பாலு, நிதிஷ் குமார்

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு சந்தித்துப் பேசினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Bihar, India

புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரிடம் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் விளக்கினார்.

தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டதாக பொய்யான செய்தியை உத்தரப் பிரதேச பா.ஜ.க நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் பரப்பினார். அதைத் தொடர்ந்து வடமாநிலங்களில் பலரும் தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோக்களைப் பரப்பினார்.

பீகார் பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் போலி வீடியோக்கள் பரப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து, புலம்பெயர் தொழிலாளர்களைச் சந்தித்து தமிழக அரசு அதிகாரிகள் உங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உறுதியளிக்கின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் புலம்பெயர் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

டி.ஆர்.பாலு, நிதிஷ் குமார்

இதற்கிடையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரைத் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், ‘தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூகவலைதளங்களில் பரப்பப்படும் வதந்தியை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தல்படி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர் பாலு, பாட்னாவில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் பீகார் மாநில தொழிலாளர்களைப் பாதுகாக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வதந்தியை கட்டுப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் டிஆர்.பாலு விளக்கமளித்தார்.

“பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம்...” புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

அதைத்தொடர்ந்து பீகார் முன்னாள் முதலமைச்சரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவியை டி.ஆர் பாலு சந்தித்து புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

First published: