தீர்ப்பே சொல்லியாச்சு ஏற்றுக்கொள்வதற்கும், ஏற்றுக்கொள்ளாததற்கும் நீங்கள் யார் என திமுக எம்.பி
அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட 7 பேர் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்துவரும் நிலையில், தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் பலர் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்று உள்ளனர். பேரறிவாளன் இல்லத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தீர்ப்பு என் தாயின் நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று பேரறிவாளன் நெகிழ்ச்சி உடன் தெரவித்தார்.
இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது.
ஒற்றுமை, பாதுகாப்பு நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம் என தெரிவித்திருந்தார்.
தீர்ப்பே சொல்லியாச்சு
நீங்க யாருங்க Saar ஏற்றுக்கொள்வதற்கும்
ஏற்றுக்கொள்ளாததற்கும்.
போயி மீசையில் இருக்கும் மண்ண தொடச்சிட்டு
கண்ணில் கண்ணீர் வர வரைக்கும் வெங்காயம் உரிக்கும் வேலையை பாருங்க.
Ooh no மீசையும் இல்லையா.
Cannot help it.
I am extremely sorry. https://t.co/xEPrR5eemB
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) May 18, 2022
இந்நிலையில், அண்ணாமலையின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக எம்.பி செந்தில் குமார் கூறியதாவது, தீர்ப்பே சொல்லியாச்சு நீங்க யாருங்க சார் ஏற்றுக் கொள்வதற்கும், ஏற்றுக் கொள்ளாததற்கும்.
பேரறிவாளனிடமும், அற்புதம்அம்மாளிடம் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
போயி மீசையில் இருக்கும் மண்ண தொடச்சிட்டு.. கண்ணில் கண்ணீர் வர வரைக்கும் வெங்காயம் உரிக்கும் வேலையை பாருங்க. ஓ மீசையும் இல்லையா.. என்னால் உதவ முடியாது. மிக வருந்துகிறேன் என திமுக எம்பி செந்தில் குமார் கிண்டலாக கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, Perarivalan