Home /News /tamil-nadu /

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து... திமுக எம்.பி. கடும் எதிர்ப்பு…

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து... திமுக எம்.பி. கடும் எதிர்ப்பு…

அறநிலையத் துறையின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து பதிவு.

அறநிலையத் துறையின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து பதிவு.

Dharmapuri DMK MP Senthil kumar | இந்துசமய அறநிலையத்துறை என்பது, அம்மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்பு மட்டும் தான் - தர்மபுரி திமுக எம்.பி செந்தில்குமார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வெளியிடப்பட்ட விநாயகர் சதுர்த்தி வாழ்த்திற்கு தர்மபுரி திமுக எம்.பி. செந்தில் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நேற்று முன்தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு அரசியல், சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

    கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திரை பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி , அவை தொடர்பான பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.

    இதற்கிடையே விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதற்கு தர்மபுரி திமுக எம்.பி. செந்தில் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    அதிமுக பொதுக்குழு செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.. இபிஎஸ் கை மீண்டும் ஓங்குகிறது...

    இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘"இந்துசமய அறநிலையத்துறை என்பது, அம்மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்பு மட்டும் தான். கடவுள் வழிபாடு செய்வதோ, அச்சமய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதோ அந்த துறையின் பணி அல்ல" - கலைஞர். சொன்னது கலைஞர் ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவரிடம்.’ என்று கூறியுள்ளார்.



    அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை சித்திரவதை... வீடியோ பார்த்து பதறிப்போன அசாம் அரசு மீட்டுச் செல்ல தீவிரம்

    இதற்கிடையே, விநாயகர் சதுர்த்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காமல் இருந்தார். இதற்கு பாஜக பிரமுகர்கள்  கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.



    இதனால் ஸ்டாலினுக்கு நெருக்கடி ஏற்பட்டு விட்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது தரப்பில் இருந்து எந்த வாழ்த்துச் செய்தியும் வெளிவரவில்லை. அதேநேரம், ஸ்டாலின் மனைவி துர்கா, விநாயகர் சதுர்த்தி நாளில் கோட்டூர் புரம் விநாயகர் கோவிலில் வழிபாடு செய்தார். இந்த புகைப்படங்கள் வைரலாகின.
    Published by:Musthak
    First published:

    Tags: DMK, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

    அடுத்த செய்தி