ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்.பி எஸ்.ராமலிங்கம் வழக்கு...!

அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்.பி எஸ்.ராமலிங்கம் வழக்கு...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றியது. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்.பி., ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றியது. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து திமுக எம்பி ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ள அணைகள் பாதுகாப்பு தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் மூலம் தேசிய அணைகள் பாதுகாப்பு குழு மற்றும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகிய இரண்டு அமைப்புகளை ஏற்படுத்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய அணைகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் வகையில் மத்திய அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Also read... 34 மாணவர்களுக்கு கொரோனா - அரசு பள்ளி மாணவர்களுக்கான போட்டித் தேர்வு பயிற்சி மையம் மூடல்!

மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் ஏற்பட்டுள்ள இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also read... நேற்று ஒரேநாளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது...!

இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கை ஜனவரி 10ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court