முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் திமுக-வில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் திமுக-வில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் திமுக-வில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று காலை திமுக எம்பிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக மட்டும் 23 தொகுதிகளில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. மேலும், 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தல்களில் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் சட்டமன்றத்தில் திமுகவின் பலம் 101 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் விரைவில் தொடங்க உள்ளது. மக்களவையில் எவ்வாறு நடந்து கொள்வது, எந்த பிரச்னைகளை முன்னிறுத்துவது உள்ளிட்டவைகளை ஆலோசிப்பதற்காகவும், விரைவில் கூட உள்ள சட்டமன்ற கூட்டத்தில் எழுப்ப வேண்டிய மக்கள் பிரச்னைகள் பற்றி விவாதிப்பதற்காகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

காலை 10 மணிக்கு கலைஞர் அரங்கில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் திமுகவின் மாவட்டச் செயலாளர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Also see... 76-வது பிறந்தநாளை கொண்டாடும் இசைஞானி இளையராஜா: சிறப்பு தொகுப்பு

Also see...


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Anna Arivalayam, DMK, MK Stalin