ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'ஆளுநர் இல்லைனா ஆன்லைன் ரம்மியை ஒழிச்சிருக்கலாம்' - கனிமொழி எம்.பி.

'ஆளுநர் இல்லைனா ஆன்லைன் ரம்மியை ஒழிச்சிருக்கலாம்' - கனிமொழி எம்.பி.

கனிமொழி

கனிமொழி

தமிழ்நாட்டில் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டுகளில் பணம் இழந்து பலரும் தங்கள் வாழ்வாதாராத்தை இழந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆளுநர் பதவி இல்லையென்றால், தமிழ்நாட்டில் தற்போது ஆன்லைன் ரம்மியை ஒழித்திருக்கலாம் என்று கனிமொழி எம்.பி., தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் விளையாட்டு முறைப்படுத்துதல் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காத நிலையில், இதுதொடர்பாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட அவசர சட்டமும் நேற்று முன்தினத்துடன் காலாவதி ஆனது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆளுநரின் செயல்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, தற்போதைய சூழலில் ஆளுநர் பதவி என்பது இல்லாவிட்டால் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். இதன் காரணமாகத் தான் ஆளுநர் பதவியே இருக்க கூடாது என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறினார்.

முன்னதாக,

தமிழ்நாட்டில் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டுகளில் பணம் இழந்து பலரும் தங்கள் வாழ்வாதாராத்தை இழந்துள்ளனர். மேலும் சிலர் தங்கள் உயிரையே மாய்த்து கொண்டுள்ளனர். இதனை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு கடந்த மாதம் 1ம் தேதி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டம் கொண்டு வந்தது.

இதனையடுத்து, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

First published:

Tags: Online rummy