இன்று, மறக்க முடியாத தினம்... கனிமொழி பகிர்ந்த நீங்காத நினைவு

எம்.பி., கனிமொழி கருணாநிதி

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான கருணாநிதி கடந்த 2001-ம் ஆண்டு இதே நாள் அதிமுக அரசின் நடவடிக்கையால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டார். 

  • Share this:
    திமுக முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி அதிமுக அரசால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்ட இன்றைய தினத்தை நினைவுப்படுத்தும் வகையில் திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான கருணாநிதி கடந்த 2001-ம் ஆண்டு இதே நாள் அதிமுக அரசின் நடவடிக்கையால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டார்.  ஜெயலலிதா தலைமையிலான  புதிய அரசு பதவியேற்ற உடன், சென்னையில் மேம்பாலம் அமைப்பதில் முந்தைய அரசு முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி கருணாநிதி கைது செய்யப்பட்டார்.

    கருணாநிதியின் கோபலபுரத்திற்கு சென்ற போலீசார் நள்ளிரவு 1.30 மணிக்கு அவரை கைது செய்தனர். அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த முத்துக்கருப்பன்,சி.பி.சி.ஐ.டி.யின் டிஐஜி முகமது அலி, டி.ஜி.பி.ரவீந்திரநாத் ஆகியோர் கைது நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். கருணாநிதியை போலீசார் கீழே தள்ளியும் வலுகட்டாயமாக அவரை இழுத்த சென்ற காட்சிகள் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. கருணாநிதி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    Also Read : சிறுமி மித்ராவை காப்பாற்றுங்கள்: பிரதமருக்கு வைகோ கோரிக்கை!

    கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கருணாநதி உடன் சிறை வாசலில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



    அதில், மறக்க முடியாத தினம். 30.06.2001. சென்னை சிறைச்சாலை வாசலில் இந்த போராளியிடம் கற்றுக்கொண்ட பாடம் 'அச்சம் கடந்தவர்களுக்கு சிறையும் சிம்மாசனமும் ஒன்றுதான்'. தனியாக அவரோடு அமர்ந்திருந்தாலும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகள் அவருக்காக தடியடிக்கு நடுவே போராடிக்கொண்டிருந்தார்கள் என்றுள்ளார். கனிமொழியின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: