’லாக்அப்’ மரணத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடம் - கனிமொழி குற்றச்சாட்டு

லாக்அப் டெத்தில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

’லாக்அப்’ மரணத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடம் - கனிமொழி குற்றச்சாட்டு
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் உயிாிழந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னீக்கஸ் குடும்பத்திற்கு திமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதியுதவியை தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி உயிாிழந்த குடும்பத்தினரிடம் வழங்கினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் எழுதி கொடுத்து அனுப்பிய கடிதத்தையும் செல்வராணியிடம் கொடுத்தார். பின்னர் செல்போனில் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேசி ஆறுதல் கூறினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி,  பாதிக்கப்பட்ட இந்த குடும்பத்திற்கு திமுக உறுதுணையாக இருக்கும். சட்ட வடிவிலான உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.லாக்அப் மரணத்தில் இந்தியாவில் தமிழ்நாடுதான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இது வரை யாருக்கு தண்டனை கிடைத்தது கிடையாது.

Also read... கொரோனா தொற்று காரணமாக இந்தியாவிலேயே மோசமான பாதிப்பை சந்தித்த நகரம் எது?இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இது குறித்து மத்திய மனித உரிமை ஆணையத்திற்கு நான் இன்று கடிதம் எழுதியுள்ளேன். இந்த சம்பவத்தை கொலையாக கருதி இதற்கு காரணமாவா்கள் கைது செய்யப்பட்ட வேண்டும் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading