மக்களின் குரலை கேட்காமல் மசோதாவை நிறைவேற்றுவதை மத்திய அரசு கைவிடவேண்டும் -கனிமொழி

மக்களின் குரலை கேட்காமல் மசோதாவை நிறைவேற்றுவதை மத்திய அரசு கைவிடவேண்டும் -கனிமொழி
திமுக எம்.பி., கனிமொழி
  • News18
  • Last Updated: December 23, 2019, 10:22 AM IST
  • Share this:
ஆட்சியில் இருக்கும் ஒரே காரணத்திற்காக மக்களின் குரலை கேட்காமல் எந்த மசோதாவையும் நிறைவேற்றுவோம் என்ற எண்ணத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் என எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் இன்று பேரணி நடத்த உள்ளது. அதற்கு முன்பாக நமது செய்தியாளரிடம் பேசிய திமுக எம்.பி., கனிமொழி, குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக திமுகவினரை தவிர மற்ற கட்சியினரும் பொது மக்களும் மாணவர்களும் இந்த பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். இதைப் பார்த்தாவது மத்திய அரசு, மக்களின் குரலை கேட்க வேண்டும்.
ஆட்சியில் இருக்கும் ஒரே காரணத்திற்காக மக்களின் குரலை கேட்காமல் எந்த மசோதாவையும் கொண்டு வந்து நிறைவேற்றுவோம் என்ற எண்ணத்தை மத்திய அரசு கைவிடவேண்டும்.

அதிமுகவின் ஆதவரின் பேராலே கொண்டு வந்த மசோதா இந்த குடியுரிமை திருத்தம். அதனால் இந்த போராட்டத்தை அதிமுகவினர் விமர்ச்சிக்கத்தான் செய்வார்கள். மேலும் இந்த மசோதா இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிரான ஒன்று என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றும் கனிமொழி தெரிவித்தார்.

Also see...
First published: December 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading