சமூகப் பிரச்சினைகளை திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து பேசியவர் விவேக் - கனிமொழி இரங்கல்

எம்.பி., கனிமொழி கருணாநிதி

சமூகப் பிரச்சினைகளைக் குறித்து தனது திரைப்படங்கள் மூலமும், பிற தளங்களிலும் தொடர்ந்து பேசியவர் என நடிகர் விவேக்கின் மரணத்துக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சமூகப் பிரச்சினைகளைக் குறித்து தனது திரைப்படங்கள் மூலமும், பிற தளங்களிலும் தொடர்ந்து பேசியவர் என நடிகர் விவேக்கின் மரணத்துக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை மோசமானதால் எக்மோ கருவி உடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. விவேக்கின் உடலுக்கு திரைபிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  அந்தவகையில், சமூகப் பிரச்சினைகளை திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து பேசியவர் விவேக் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

  இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், நடிகர் பத்மஸ்ரீ. விவேக் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. அவர் பல சமூகப் பிரச்சினைகளைக் குறித்து தனது திரைப்படங்கள் மூலமும், பிற தளங்களிலும் தொடர்ந்து பேசியவர். சமூகத்தின் பல நிலைகளிலும், நிலவி வரும் பாசாங்குகளைக் கண்டித்தவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: