• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெயர் சூட்டப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதுதான் சரி - கனிமொழி

பெயர் சூட்டப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதுதான் சரி - கனிமொழி

கனிமொழி

கனிமொழி

ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுவது சரியாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

  • Share this:
    தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது சரியாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். 

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வந்த மார்பக பரிசோதனை முகாம் நிறைவு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்றார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “பெண்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதாக தெரிவித்த அவர் தயக்கமின்றி பெண்கள் மார்பக புற்றுநோயை தடுக்கும் வகையில் பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என்றார்

    புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கட்சியாக இருக்கும்போது எந்த அளவு திமுக எதிர்த்ததோ அதே அளவு இனிவரும் காலங்களிலும் திமுக எதிர்க்கும் என்று கூறினார். நவம்பர் 1ந் தேதிக்கு பதில் தமிழ்நாடு நாள் ஜூலை 18-ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளதற்கு மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுவது சரியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: