திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மனைவி காலமானார்: மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மனைவி காலமானார்: மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

 • Share this:
  முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பியுமான ஜெகத்ரட்சகன் அவர்களின் மனைவி அனுசுயா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி பொதுச்செயலாளர் துறைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டேர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

  மறைந்த அனுசுயா, உடல் நலக்குறைவால் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவார காலமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்கை பலனின்றி உயிரிழந்தார்.

  இந்நிலையில், அவரது உடல் வைக்கப்பட்டுள்ள அடையாறு இல்லத்திற்குச் சென்ற திமுக பிரமுகர்களும் பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மனைவியை இழந்து வாடும் எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும், பிரமுகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

  அனுசுயாவின் உடல் மாலை 4.30 மணியளவில், அடையாறில் உள்ள வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
  Published by:Suresh V
  First published: