நீங்கள் மட்டும் தான் நேர்மையானவர் நல்லவர் என்று எண்ணுகிறீர்களா அப்படி என்றால் தேர்தலில் நின்றிருக்கலாமே அறப்போர் ஜெயராம் ட்வீட் குறித்து தி.மு.க எம்.பி செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு இயந்திரங்களில் நோட்டா (NOTA) பட்டன் கிடையாது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மாநில தேர்தல் ஆணையத்தைக் கண்டிக்கும் வகையில், தேர்தல் விதி பிரிவு 71-ன் படி அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன், `தான் வாக்களிக்க விரும்பவில்லை' என்பதை மைலாப்பூரில் உள்ள தனது பூத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட ஜெயராம், “ NOTA பட்டன் EVM இல் வைக்காமல் ரகசியமாக வாக்கு செலுத்தும் உரிமையையும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையையும் மறுத்த மாநில தேர்தல் ஆணையத்தை கண்டிக்கும் வகையில் தேர்தல் விதி பிரிவு 71 படி நான் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்தேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
NOTA பட்டன் EVM இல் வைக்காமல் ரகசியமாக வாக்கு செலுத்தும் உரிமையையும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையையும் மறுத்த மாநில தேர்தல் ஆணையத்தை கண்டிக்கும் வகையில் தேர்தல் விதி பிரிவு 71 படி நான் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்தேன் pic.twitter.com/EUYfANgtEm
இவரது பதிவுக்கு கீழ் சிலர் கமெண்ட்ஸ் செய்திருந்த நிலையில், “ என்னுடைய வாக்கை ரகசியமாக செலுத்த வழிவகை செய்திருக்க வேண்டும் மாநில தேர்தல் ஆணையம். அதற்கு எதிராக தான் இந்த போராட்டம். பிரிவு 71 என்பதே அனைவருக்கும் தெரிந்து போடுவதே. சட்ட விரோதமாக இந்த பிரிவை வைத்தும் சட்ட விரோதமாக NOTA பட்டன் இல்லாமல் செய்த தேர்தல் ஆணையத்தை கண்டிக்கிறோம்.” எனப் பதிலளித்திருந்தார்.
நீங்கள் வசிக்கும் தெருவில்/வார்டில் உங்கள் வாக்கினை பெற தகுதியான ஒரு அரசியல் கட்சி/ சுயேச்சை வேட்பாளர் கூட இல்லையா
அல்லது நீங்கள் மட்டும் தான் நேர்மையானவர்/ நல்லவர் என்று எண்ணுகிறீர்களா
அப்படி என்றால் நீங்களே இந்த தேர்தலில் போட்டியிட்டிருக்கலாமே
இந்த நிலையில் ஜெயராம் ட்விட்டர் பதிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ள திமுக எம்.பி. செந்தில் குமார், “நீங்கள் வசிக்கும் தெருவில்/வார்டில் உங்கள் வாக்கினை பெற தகுதியான ஒரு அரசியல் கட்சி/ சுயேச்சை வேட்பாளர் கூட இல்லையா. அல்லது நீங்கள் மட்டும் தான் நேர்மையானவர்/ நல்லவர் என்று எண்ணுகிறீர்களா. அப்படி என்றால் நீங்களே இந்த தேர்தலில் போட்டியிட்டிருக்கலாமே. இனி கட்சிகளை குறை கூற முடியாது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ஜெயராம், “EVM இல் NOTA என்பது ஒரு ஜனநாயக உரிமை. ஒரு MP யாக நீங்கள் தேர்தல் ஆணையத்தை கண்டித்து இதை பெற்று தந்திருந்தால் என் வார்டில் யார் நல்லவரோ அவருக்கு நான் வாக்கு செலுத்தி இருக்க முடியும். நீங்கள் செய்யாததால் ரகசியமாக NOTA செலுத்தும் உரிமையை இழந்த மக்களுக்கு நாங்கள் குரல் கொடுக்கிறோம் ” என பதிலளித்துள்ளார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.