முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்துவது ஏன்? மத்திய அரசுக்கு திமுக எம்.பி தயாநிதி மாறன் கேள்வி

தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்துவது ஏன்? மத்திய அரசுக்கு திமுக எம்.பி தயாநிதி மாறன் கேள்வி

தயாநிதி மாறன் (கோப்புப் படம்)

தயாநிதி மாறன் (கோப்புப் படம்)

மத்திய சென்னை தொகுதி மேம்பாட்டுக்காக 2019-20 நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்ட முழு தொகையையும் உடனே வழங்க வேண்டும்

  • Last Updated :

இரண்டு ஆண்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்துவதாக அறிவித்துவிட்டு தற்போது மூன்றாண்டுக்கான நிதியை நிறுத்துவது ஏன்? என்று மத்திய அரசுக்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2019-20 நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு திரும்பப்பெற நினைப்பது எம்.பி.க்களின் உரிமையை பறிக்கும் செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் விடுத்த சுற்றறிக்கையை உடனே திரும்ப வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள தயாநிதி மாறன், மத்திய சென்னை தொகுதி மேம்பாட்டுக்காக 2019-20 நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்ட முழு தொகையையும் உடனே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see...

top videos

    First published:

    Tags: Dayanidhi Maran