முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திமுக எம்.பி. ஆ.ராசாவின் மனைவி காலமானார்!

திமுக எம்.பி. ஆ.ராசாவின் மனைவி காலமானார்!

ஆ.ராசா மனைவி காலமானார்!

ஆ.ராசா மனைவி காலமானார்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்று, அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து விசாரித்தார்.

  • Last Updated :

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல் நலக் குறைவால் காலமானார்.

தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோய் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை அவரது உயிர் பிரிந்தது. சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரியின் உயிர் பிரிந்ததாக சென்னை ரேலா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோய்க்காக 6 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து, அவருக்கு கீமோதெரபி அளிக்கப்பட்ட நிலையிலும், அவரது உடல் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அவருக்கு நோய் தொற்று தீவிரமானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பரமேஸ்வரியின் உடல்நிலை இன்று கவலைக்கிடமானது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து விசாரித்தார்.

எனினும், சிகிச்சை பலனின்றி இன்று மாலை பரமேஸ்வரியின் உயிர் பிரிந்தது. அவரது மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மறைந்த பரமேஸ்வரிக்கு பெரம்பலூரில் இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: A Raja, DMK