ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழனத் துரோகி யார்? மு.க.ஸ்டாலினை விவாதத்துக்கு அழைத்த அன்புமணிக்கு பதிலளித்த தி.மு.க எம்.பி

தமிழனத் துரோகி யார்? மு.க.ஸ்டாலினை விவாதத்துக்கு அழைத்த அன்புமணிக்கு பதிலளித்த தி.மு.க எம்.பி

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நேற்று தி.மு.க சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது, இலங்கைத் தமிழர்களுக்கு பா.ம.க துரோகம் செய்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளது.

  அதற்கு பதிலளித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வீடியோவில், ‘பா.ம.க தொடங்கப்பட்டதிலிருந்து இலங்கைத் தமிழர்களுக்கு பல்வேறு போராட்டங்கள், அரசியல் தளத்தில் பல்வேறு அழுத்தங்கள் கொடுத்துள்ளோம். ஆனால், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களுக்கு பா.ம.க துரோகம் இழைத்ததாகப் பேசியுள்ளார்.

  செந்தில்குமார் எம்.பி.

  தமிழ்நாடு, டெல்லி, ஐ.நா வரையில் பா.ம.க அழுத்தம் கொடுத்துள்ளது. உண்மையில் தி.மு.க தான் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. இலங்கைப் பிரச்னை தொடங்கிய 1983-ம் ஆண்டுக்குப் பிறகு 12 ஆண்டுகள் தி.மு.க ஆட்சியில் இருந்தது. 18 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் கூட்டணியில் இருந்துள்ளது. அப்போது ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வாங்கிக் கொடுக்கவில்லை’ என்று பேசியிருந்தார்.

  மேலும், ட்விட்டரில், ‘தமிழன துரோகிகள் யார்? என்னுடன் விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்விஎழுப்பியிருந்தார்.

  அதற்கு பதிலளித்திருந்த தருமபுரி தொகுதியில் அன்புமணியை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க எம்.பி செந்தில்குமார், ‘நான் விவாதிக்க தயார். நீங்கள் சொல்லும் இடத்தில், சொல்லும் தேதியில், சொல்லும் நேரத்தில் உங்களுடன் விவாதிக்க தயார். பொதுவெளியில் சவால்விடுகிறேன். ஆரோக்கியமான விவாதத்துக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

  Also see:

   

  Published by:Karthick S
  First published:

  Tags: Anbumani ramadoss