முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆ.ராசா பேசுனத்துக்கு திமுககாரங்களே விமர்சனம் பண்றாங்க.. நானும் இந்துதான்..! - பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம்

ஆ.ராசா பேசுனத்துக்கு திமுககாரங்களே விமர்சனம் பண்றாங்க.. நானும் இந்துதான்..! - பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம்

பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

'திமுகவில் உள்ளவர்களே ஆ.ராசாவை விமர்சனம் செய்கின்றனர்' - பொன்.ராதாகிருஷ்ணன்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

இந்துக்கள் பற்றி பேசிய கருத்துக்களை ஆ.ராசா திரும்ப பெற்று அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் உதயநிதி பாசறைக் கூட்டத்தின் மூலம் 1000 ராசாக்களை உருவாக்குவார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பாரத பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆ.ராசா இந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் திமுகவினரே அவரை விமர்சனம் செய்கின்றனர்.

ராசா தனது வார்த்தையை திரும்பப் பெற வேண்டும். புத்தகம் படிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆட்டை கடித்து மாட்டை கடித்து இறுதியில் அடுத்த மதத்தை இவ்விதம் பேசுவார். இந்துக்கள் சகிப்புத் தன்மை கொண்டவர்கள். நானும் இந்து தான். அனைவருக்கும் குடும்பம் உள்ளது. ராசா இவ்விதம் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும் திமுகவில் நடைபெற்று வரும் பாசறை கூட்டங்கள் உதயநிதி பாசறை கூட்டம் எனவும் அந்த பாசறை கூட்டத்தின் மூலம் 10 அல்ல ஆயிரம் ராசாக்களை அவர்கள் உருவாக்குவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

ச.செந்தில், செய்தியாளர்

First published:

Tags: Pon Radhakrishnan, Tenkasi