ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் - மணிப்பூர் வழக்கை சுட்டிக்காட்டி திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு

அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக இதுவரை சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் - மணிப்பூர் வழக்கை சுட்டிக்காட்டி திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு
ஓ பன்னீர் செல்வம் | முக ஸ்டாலின் | எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: June 9, 2020, 7:23 AM IST
  • Share this:
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்ததால் ஓ.பன்னீர் செல்வம், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்யக்கோரி அளிக்கப்பட்ட புகார்மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும், இதுவரையிலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை இது சட்டத்திற்குப் புறம்பானது என திமுகவின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மணிப்பூர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்தான் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி, அரசுக்கு எதிராக வாக்களித்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் முடிவெடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் அரசியல் சாசனப்பிரிவு 14ன் படி சபாநாயகர் தனது கடைமையைச் செய்யவில்லை.

தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டிய எம்.எல்.ஏ.க்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத்தால், அணிமாறிய ஐந்து எம்எல்ஏக்களை சட்டசபைக்குள் செல்ல மணிப்பூர் உயர்நீதிமன்றம்  தடை விதித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு 11 எம்.எல்.ஏ.க்களை வழக்கிலும் உச்சநீதிமன்றம் இடைக கால உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கு வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also See: புதிய வகை கொரோனா வைரஸால் மேலும் ஆபத்தா? விஞ்ஞானி விளக்கம்


First published: June 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading