ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'பலிகடாவாகும் தமிழ்.. நித்தியானந்தாவுக்கு ஏன் அழைப்பில்லை?'.. 'காசி தமிழ் சங்கமம்' குறித்து முரசொலி விமர்சனம்!

'பலிகடாவாகும் தமிழ்.. நித்தியானந்தாவுக்கு ஏன் அழைப்பில்லை?'.. 'காசி தமிழ் சங்கமம்' குறித்து முரசொலி விமர்சனம்!

"ஆட்டுக்கு மாலை சூட்டி பலிபீடத்துக்கு கொண்டு செல்வதை போல தமிழை பலிகடாவாக்க திட்டமிட்டு நடத்தப்படும் சூழ்ச்சி”

"ஆட்டுக்கு மாலை சூட்டி பலிபீடத்துக்கு கொண்டு செல்வதை போல தமிழை பலிகடாவாக்க திட்டமிட்டு நடத்தப்படும் சூழ்ச்சி”

"ஆட்டுக்கு மாலை சூட்டி பலிபீடத்துக்கு கொண்டு செல்வதை போல தமிழை பலிகடாவாக்க திட்டமிட்டு நடத்தப்படும் சூழ்ச்சி”

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, சமஸ்கிருதமும் இந்தியும் தமிழை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சி என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி விமர்சித்துள்ளது.

  காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் நடைபெற்றது. இதனை முரசொலி நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளது.

  இது தொடர்பாக இன்று வெளியான கட்டுரையில், “பிரதமர் மோடி காசி விசுவநாதர், காஞ்சி ஏகாம்பரநாதர் எல்லாம் குறிப்பிட்டார். அந்த சிவனுக்காக ஒரு நாட்டையே சிருஷ்டித்துள்ளவர் அந்த பிரமுகர்.!

  தமிழ்நாட்டு ஆளுநர் ரவி, மதம் சாராத நாடு இருக்க முடியாது என்று கூறியதற்கொப்ப ஒரு மதத்தை, ஆளுநர் ரவியும், பிரதமர் மோடியும் விரும்புகிறபடி நிறுவி ஒரு மதசார்பான நாட்டை உருவாக்கி ஆண்டு கொண்டிருப்பவர். அந்த நாட்டின் பெயரையே கைலாச என்று வைத்து தன்னை சிவனின் மறு அவதாரமாக அறிவித்து ஆட்சி புரிந்து கொண்டிருப்பவர்.

  அந்த அற்புத அவதாரம் நித்தியானந்தாவை ஏன் இந்த சங்கமத்துக்கு அழைக்காமல் விட்டார்கள் என்பது புரியவில்லை.

  நித்தியானந்தா வந்திருந்தால் வந்திருந்த கூட்டத்தின் மொத்த கவனமும் அவரை சுற்றி போய்விடுமோ என்ற பயத்தில் விழா ஏற்பாட்டாளர்கள் தவிர்த்து விட்டார்களோ என்னவோ புரியவில்லை. மதுரை ஆதீனத்தின் மடாதிபதியாக சிறிது காலம் இருந்த நித்தியானந்தா இல்லாதது அவரது பக்தர்களுக்கு ஒரு குறை தானே.” என நகையாடும் விதமாக கேள்வி எழுப்பப்பட்டிருந்தனது.

  'மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்தால் அரசு வேலையில் முன்னுரிமை’ - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி 

  மேலும், “காசியில் தமிழ் சங்கமம் விழா நடத்தி தமிழ் மேல் தனக்குள்ள பற்றை காண்பித்துள்ளார் பிரதமர் மோடி என்று இங்கு சில வலதுசாரிகள் சொல்கிறார்கள். இந்த பம்மாத்து வேலைகள் எல்லாம் எதற்காக செய்கிறார்கள் என்பதை தமிழ் மக்கள் அறியாதவர்கள் அல்ல. நானே சொன்னாலும், அது ஏன் எதற்காக என்று கேட்டு சிந்தித்து தெளிவு கொள் என்று தந்தை பெரியாரால் பயிற்சிவிக்கப்பட்ட மண் இது. இங்கே மோடி அமித்ஷா கூட்டத்தின் நாடகங்கள் அரங்கேறாது.

  தமிழுக்காக ஒரு விழா எடுத்திடும் மோடியை பாராட்ட வேண்டாமா என்கிறார்கள் இந்த வான வேடிக்கைகளை நம்பிட தமிழர்கள் இளித்தவாயார்கள் அல்ல. தமிழையும் ஆட்சி மொழியாகட்டும், தமிழ் உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழி என அறிவிக்கட்டும்,செம்மொழி தமிழ் வளர்ச்சிக்கு உரிய நிதி ஒதுக்கட்டும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்கும் முயற்சியை கைவிடட்டும், சமஸ்கிருதத்தை தூக்கி நிறுத்திட செலவிடும் தொகை அளவு செம்மொழி தமிழ் வளர்ந்திட நிதி ஒதுக்கட்டும். இந்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வந்தால் பிரதமர் மோடியை உச்சிமோந்து பாராட்ட தயார்.

  தமிழ் சங்கமத்தில் குறைந்தபட்சம் தென்னாடுடைய சிவனே போற்றி... எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி.. என்ற பாடல் கூட ஒலிக்கவில்லை.

  ஹரஹர மாஹாதேவ்.. ருத்ராய.. ருத்ராய.. நமோ... சம்போ... சம்போ... சங்கரா.. சம்போ...

  என்றும், ஜனனி... ஜனனி.. என்று தானே பாடல்கள் கேட்டன. அது தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அல்ல சமஸ்கிருதமும் இந்தியும் தமிழை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சி.

  ஆட்டுக்கு மாலை சூட்டி பலிபீடத்துக்கு கொண்டு செல்வதை போல தமிழை பலிகடாவாக்க திட்டமிட்டு நடத்தப்படும் சூழ்ச்சி” என விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: DMK, Murasoli, PM Modi