ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆன்லைன் ரம்மி தடை மசோதா- ஆளுநரின் காலதாமதத்தில் சந்தேகம்... முரசொலி

ஆன்லைன் ரம்மி தடை மசோதா- ஆளுநரின் காலதாமதத்தில் சந்தேகம்... முரசொலி

ஆளுநர் ஆர்.என்.ரவி - ஆன்லைன் ரம்மி

ஆளுநர் ஆர்.என்.ரவி - ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு கையெழுத்து போடாமல் இழுத்தடிக்கும் ஆளுநரைக் கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா என்றும் முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வது சந்தேகத்திற்குரியது என்று முரசொலி விமர்சித்துள்ளது.

முரசொலி பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்தில், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு இதுவரை உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  மசோதா தொடர்பாக உரிய விளக்கமளித்தும் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை என்றும், ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கமளிக்க அனுமதி கேட்டும் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்ட முன்வடிவு, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு இயற்றப்பட்டுள்ளதாகவும், வல்லுநர் குழு அறிக்கை மற்றும் ஆராய்ச்சி தரவுகளின் அடிப்படையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆளுநரின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்துள்ள முரசொலி, ஆன்லைன் விளையாட்டுகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படவில்லை என்றும், ஆன்லைன் சூதாட்டங்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இதையும் படிங்க: இதுவரை சுமார் 26 லட்சம்.. மின் இணைப்போடு ஆதாரை இணைக்கும் பயனர்கள்..!

ஆளுநரின் சந்தேகங்கள் அனைத்தும் ஏதோ கேட்க வேண்டும், தாமதப்படுத்த வேண்டும் என்ற அளவில்தான் இருக்கிறதே தவிர, உண்மையான கேள்விகளாக இல்லை என்றும் முரசொலி விமர்சித்துள்ளது. ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு கையெழுத்து போடாமல் இழுத்தடிக்கும் ஆளுநரைக் கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா என்றும் முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வது சந்தேகத்திற்குரியதாக பொதுமக்களால் பார்க்கப்படுகிறது என்றும் முரசொலி குறிப்பிட்டுள்ளது.

First published:

Tags: DMK, Murasoli, RN Ravi